திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம் | Murugan mantra for marriage | திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம் 

திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம்

திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம்

எந்த துன்பம் இருந்தாலும் தமிழ் கடவுளான கந்தக் கடவுளின் திருவடிகளை பிடித்து அவனை அழைந்திருப்பினால், பிரச்சனைகள் வந்த இடம் தெரியாமல் அகன்று விடுமென்று கூறுகிறார்கள்.

அருணகிரி நாதர் சுவாமிகள் வழங்கிய முருகனின் திருப்புகழ் மந்திரத்தை 48 நாட்கள் ஒரு மண்டலமாக பாராயணம் செய்வதின் மூலம் உடனடியாக திருமணம் ஏற்படுவதாக கிருபானந்த வாரியாரால் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்யாதவர்கள், குடும்பத்தில் கணவன்-மனைவி மோதலில் உள்ளவர்கள், பிரச்சனையை காரணமாகப் பிரிந்தவர்கள் காலை அல்லது மாலை நேரத்தில் வீட்டின் உள்ளே விளக்கேற்றி வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

ஒரே நாளில் 6 முறை என்ற அளவில் 48 நாட்கள் தொடர்ந்து கூறி வந்தால், எந்த திருமண தோஷம் இருந்தாலும் உறுதியாக விலகி விடும். 48 நாட்களில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகி, ஆனந்தமான செய்தி உங்களை சந்திக்கும்.

இதுவது பலரின் வாழ்வில் சாத்தியமாக நிகழ்ந்து, பலன் அளிக்கும் மந்திரமாகவுள்ளது.

திருப்புகழ் பதிகம்

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான் துன்ப மயில் தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா
அறிவா லறிந்த னிருதாளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.