Vinayagar thuthi padal lyrics in tamil | ஓம் விநாயகர் துதிகள் பாடல் வரிகள்
வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! விநாயகனே…