- அளகாபுரி அரசே போற்றி
- ஆனந்தம் தரும் அருளே போற்றி
- இன்பவளம் அளிப்பாய் போற்றி
- ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
- உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
- ஊக்கம் அளிப்பவனே போற்றி
- எளியோனுக்கு அருள்பவனே போற்றி
- ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
- ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
- ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
- ஓங்கார பக்தனே போற்றி
- கருத்தில் நிறைந்தவனே போற்றி
- கனகராஜனே போற்றி
- கனகரத்தினமே போற்றி
- காசு மாலை அணிந்தவனே போற்றி
- கிந்நரர்கள் தலைவனே போற்றி
- கீர்த்தி அளிப்பவனே போற்றி
- கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
- குருவாரப் பிரியனே போற்றி
- குணம் தரும் குபேரா போற்றி
- குறை தீர்க்கும் குபேரா போற்றி
- கும்பத்தில் உறைபவனே போற்றி
- குண்டலம் அணிந்தவனே போற்றி
- குபேர லோக நாயகனே போற்றி
- குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
- கேடதனை நீக்கிடுவாய் போற்றி
- கேட்டவரம் அளிப்பவனே போற்றி
- கோடி நிதி அளிப்பவனே போற்றி
- சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
- சங்கரர் தோழனே போற்றி
- சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
- சமயத்தில் அருள்பவனே போற்றி
- சத்திய சொரூபனே போற்றி
- சாந்த சொரூபனே போற்றி
- சித்ரலேகா பிரியனே போற்றி
- சித்ரலேகா மணாளனே போற்றி
- சிந்தையில் உறைபவனே போற்றி
- சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
- சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
- சிவபூஜை பிரியனே போற்றி
- சிவ பக்த நாயகனே போற்றி
- சிவ மகா பக்தனே போற்றி
- சுந்தரர் பிரியனே போற்றி
- சுந்தர நாயகனே போற்றி
- சூர்பனகா சகோதரனே போற்றி
- செந்தாமரைப் பிரியனே போற்றி
- செல்வ வளம் அளிப்பவனே போற்றி
- செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
- சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
- சொக்கநாதர் பிரியனே போற்றி
- சௌந்தர்ய ராஜனே போற்றி
- ஞான குபேரனே போற்றி
- தனம் அளிக்கும் தயாபரா போற்றி
- தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
- திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
- திருவிழி அழகனே போற்றி
- திருவுரு அழகனே போற்றி
- திருவிளக்கில் உறைவாய் போற்றி
- திருநீறு அணிபவனே போற்றி
- தீயவை அகற்றுவாய் போற்றி
- துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
- தூயமனம் படைத்தவனே போற்றி
- தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
- தேவராஜனே போற்றி
- பதுமநிதி பெற்றவனே போற்றி
- பரவச நாயகனே போற்றி
- பச்சை நிறப் பிரியனே போற்றி
- பவுர்ணமி நாயகனே போற்றி
- புண்ணிய ஆத்மனே போற்றி
- புண்ணியம் அளிப்பவனே போற்றி
- புண்ணிய புத்திரனே போற்றி
- பொன்னிற முடையோனே போற்றி
- பொன் நகை அணிபவனே போற்றி
- புன்னகை அரசே போற்றி
- பொறுமை கொடுப்பவனே போற்றி
- போகம்பல அளிப்பவனே போற்றி
- மங்கல முடையோனே போற்றி
- மங்களம் அளிப்பவனே போற்றி
- மங்களத்தில் உறைவாய் போற்றி
- மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
- முத்து மாலை அணிபவனே போற்றி
- மோகன நாயகனே போற்றி
- வறுமை தீர்ப்பவனே போற்றி
- வரம் பல அருள்பவனே போற்றி
- விஜயம் தரும் விவேகனே போற்றி
- வேதம் போற்றும் வித்தகா போற்றி
- வைர மாலை அணிபவனே போற்றி
- வைகுண்டவாசப் பிரியனே போற்றி
- நடராஜர் பிரியனே போற்றி
- நவதான்யம் அளிப்பவனே போற்றி
- நவரத்தினப் பிரியனே போற்றி
- நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
- நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
- வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
- ராவணன் சோதரனே போற்றி
- வடதிசை அதிபதியே போற்றி
- ரிஷி புத்திரனே போற்றி
- ருத்திரப் பிரியனே போற்றி
- இருள் நீக்கும் இன்பனே போற்றி
- வெண்குதிரை வாகனனே போற்றி
- கைலாயப் பிரியனே போற்றி
- மனம் விரும்பும் மன்னவனே போற்றி
- மணிமகுடம் தரித்தவனே போற்றி
- மாட்சிப் பொருளோனே போற்றி
- யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
- யௌவன நாயகனே போற்றி
- வல்லமை பெற்றவனே போற்றி
- ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
குபேரா போற்றி போற்றி