கற்சிலை என்றாலும்
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நீ கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அற்புதமாகிய
அருட்பெரும் சுடரே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
அறுமறை தேடிடும்
கருணையங் கடலே
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும்
நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும்
நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும்
நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன்
கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன்
கண்விழியாலே
கற்பனை என்றாலும்
கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்