- ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
- ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி
- ஓம் கருகாவூர் தேவியே போற்றி
- ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி
- ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி
- ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி
- ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி
- ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி
- ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி
- ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி
- ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி
- ஓம் எங்களை என்றும் காப்பவளே போற்றி
- ஓம் பிள்ளைக் கலி தீர்க்கும்பேரொளியே போற்றி
- ஓம் பிறவிப் பயன் தந்து அருள்வாய் போற்றி
- ஓம் பிண்டமாய் இருக்கும் கருவளர்ப்பாய் போற்றி
- ஓம் பிரம்மனின் படைப்புக்கு உயிர் தருவாய் போற்றி
- ஓம் முல்லைவனத்தில் அரசாள்வாய் போற்றி
- ஓம் நித்திருவர் தொழுத நித்திலமே போற்றி
- ஓம் நற்றவத்திற்கு அருளும் நாயகியே போற்றி
- ஓம் நாடிவரும் பக்தர் துயர்களைவாய் போற்றி
- ஓம் சர்வ வல்லமை பெற்ற ஈஸ்வரியே போற்றி
- ஓம் சர்வேஸ்வரனின் சரிபாதியே போற்றி
- ஓம் சங்கடங்கள் தீர்க்கும் சங்கரியே போற்றி
- ஓம் சார்ந்து நிற்போரை ரஷிப்பாய் போற்றி
- ஓம் பெண்கள் கருவறையை காப்பவளே போற்றி
- ஓம் பிரியமுடன் எங்களை வாழ்த்துவாய் போற்றி
- ஓம் பாதியில் கலையாத கரு தந்தாய் போற்றி
- ஓம் பாரினில் மகிழ்வான் வாழ்வளிப்பாய் போற்றி
- ஓம் நெய்யாலே படிமெழுக நீ மகிழ்வாய் போற்றி
- ஓம் மெய்யான பக்திக்கு உருகிடுவாய் போற்றி
- ஓம் தூய்மையுடன் வணங்குவோர் துயர்துடைப்பாய் போற்றி
- ஓம் வாய்மையுடன் வரம் தந்து வளம் தருவாய் போற்றி
- ஓம் வேதிகைக்கு அருள் சுரந்த அன்னையே போற்றி
- ஓம் வேண்டுபவர் அருகினில் வந்திடுவாய் போற்றி
- ஓம் வனிதையரின் வாழ்விற்கு வரமாளாய் போற்றி
- ஓம் வாழ்நாளில் வழிகாட்டும் வடிவழகே போற்றி
- ஓம் கலைந்த கர்ப்பம் உருவாக்கி உயிர் கொடுத்தாய் போற்றி
- ஓம் காமதேனு அழைத்து தாய்ப்பால் தந்தாய் போற்றி
- ஓம் தம்பதியாய் வருவோர்க்கு தஞ்சமளிப்பாய் போற்றி
- ஓம் தாயே உன் அருள் என்றும் தர வேண்டும் போற்றி
- ஓம் வலக்கரத்தால் அபயமளிக்கும் வனிதாமணியே போற்றி
- ஓம் இடக்கரத்தால் கர்ப்பத்தைக் காத்து நிற்ப்பாய் போற்றி
- ஓம் பத்ம பீடத்தில் அமர்ந்திருக்கும் பார்வதியே போற்றி
- ஓம் பிரசவத்தில் துணையிருக்கும் பெரிய நாயகியே போற்றி
- ஓம் கருகாமல் கருகாக்கும் கண்மணியே போற்றி
- ஓம் கர்ப்புரியில் வசிக்கும் கற்பகமே போற்றி
- ஓம் அகில உலகம் காக்கும் லோகநாயகியே போற்றி
- ஓம் அன்னை என்ற அருள் தந்து துயர்தீர்ப்பாய் போற்றி
- ஓம் மாதவிவநேச்வரரின் மாதரசியே போற்றி
- ஓம் முல்லைக் கொடி இடையே வந்த மெல்லியனே போற்றி
- ஓம் ஈஸ்வரனின் இதயத்தில் வீற்றிருப்பாய் போற்றி
- ஓம் ஈரேழு லோகத்தையும் என்றும் காப்பாய் போற்றி
- ஓம் கடம்பவன சுந்தரியே கற்புக்கரசியே போற்றி
- ஓம் காலம் பூராவும் கர்ப்பை காப்பவளே போற்றி
- ஓம் கல்லாக நின்று கருணைபொழிவாய் போற்றி
- ஓம் கதிரொளியே கனகமே கண்மணியே போற்றி
- ஓம் மலடி என்ற பெயர் நீக்கும் மங்களமே போற்றி
- ஓம் மங்கையர்க்கு அருகிலிருக்கும் மந்திரமே போற்றி
- ஓம் மருத்துவர்க்கும் சக்தி தரும் மாதவியே போற்றி
- ஓம் மறுமையிலும் உடனிருந்தும் மகிழ்விப்பாய் போற்றி
- ஓம் அசையும் கருவை அலுங்காமல் காப்பாய் போற்றி
- ஓம் அகிலத்தின் இயக்கத்தில் ஆனந்திப்பாய் போற்றி
- ஓம் அம்மா என்றுன்னை ஆராதிப்பேன் போற்றி
- ஓம் அம்மாவாய் என்னை ஆக்கினாய் போற்றி
- ஓம் மகேஸ்வரி உலகையே ஆள்கிறாய் போற்றி
- ஓம் மங்கலங்கள் பல தரும் மாதாவே போற்றி
- ஓம் ஸ்ரீ சக்ர வாசினி ஸ்திரீ தனமே போற்றி
- ஓம் சத்ரு பயம் நீங்க சரண்டைந்தேன் போற்றி
- ஓம் பிள்ளையில்லா தவிப்புக்கு பிரசாதமளிப்பாய் போற்றி
- ஓம் பிரபஞ்சத்தில் பெண்களை காப்பவளே போற்றி
- ஓம் பகவானின் ப்ரீதியே பரதேவதையே போற்றி
- ஓம் லிரத்யனாமாய் என்னுடன் இருப்பவளே போற்றி
- ஓம் உற்சாகமாய் தோன்றும் கர்ப்பம் காப்பாய் போற்றி
- ஓம் ஓழுங்காய் என் பிள்ளை பிறக்கச் செய்வாய் போற்றி
- ஓம் உன்னையன்றி யாருமில்லை சரணடைந்தேன் போற்றி
- ஓம் ஊரார் மெச்ச நான் வாழ வாழ்த்துவாய் போற்றி
- ஓம் காந்த கண்ணழகி முத்துப்போல் பல்லழகியே போற்றி
- ஓம் மின்னும் மூக்கழகி புன் முறுவற் சிரிப்பழகி போற்றி
- ஓம் சொர்ணமும், வைரமும் மின்ன ஜொலிக்கும் அழகியே போற்றி
- ஓம் ஒய்யார வடிவழகி அருள் மணக்கும் பேரழகியே போற்றி
- ஓம் துக்கங்கள் தீர்க்கும் துணையே போற்றி
- ஓம் துன்பமில்லாத வாழ்வருளும் தேவியே போற்றி
- ஓம் சங்கடம் தீர்க்கும் சங்கரியே போற்றி
- ஓம் சலனமில்லா வாழ்வருளும் சாம்பவியே போற்றி
- ஓம் மழலைச் செல்வம் தர மனமிரங்குவாய் போற்றி
- ஓம் மாதர்க்கு நீ என்றும் அரணாவாய் போற்றி
- ஓம் கதியென்று நம்பினவருக்கு கருணைசெய்வாய் போற்றி
- ஓம் கண்டவுடன் கஷ்டம் தீர்க்கும் கெளரியே போற்றி
- ஓம் நெஞ்சிற் கவலைகள் நீக்குவாய் போற்றி
- ஓம் செஞ்சுடர் குங்குமம் தரித்தாய் போற்றி
- ஓம் அஞ்சுமென் மனத்துக்கு ஆறுதலே போற்றி
- ஓம் தஞ்சம் நீயே தாமரையே போற்றி
- ஓம் சக்தியின் வடிவமே போற்றி
- ஓம் பக்தியுடன் தொழுவோரின் பரதேவி போற்றி
- ஓம் நித்தமுன் அருள்வேண்டி நமஸ்கரித்தேன் போற்றி
- ஓம் நீயிருக்க பூவுலகில் பயமில்லை போற்றி
- ஓம் மனமெல்லாம் நீ நிறைந்தாய் மகேஸ்வரி போற்றி
- ஓம் மங்கள வாழ்வுதந்து மகிழ்விப்பாய் போற்றி
- ஓம் மங்கையரின் கர்ப்பை காக்கின்றாய் போற்றி
- ஓம் கருகாவூர் அரசியே கருணாரசமே போற்றி
- ஓம் தலைமுறை தழைக்கச் செய்யும் தாயே போற்றி
- ஓம் குலம் வாழ மகருளும் மாதே போற்றி
- ஓம் சகலரும் உன் சக்தி சார்ந்தோம் போற்றி
- ஓம் சோர்வு நீங்க உன் பாதம் சரணடைந்தோம் போற்றி
- ஓம் ஜயம் வேண்டும் ஜயம் வேண்டும் போற்றி
- ஓம் ஜகத்தினில் எங்கள் சக்தி ஓங்க வேண்டும் போற்றி
- ஓம் ஜீவனை ஜனிக்க வைக்கும் ஜகன்மாதா போற்றி
- ஓம் ஜயமங்களம் ஜயமங்களம் ஜனனியே போற்றி…