அழகெல்லாம் முருகனே பாடல் வரிகள்

அழகெல்லாம் முருகனே

அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே

தெய்வமும் முருகனே

தெய்வமும் முருகனே

அழகெல்லாம் முருகனே

அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே

தெய்வமும் முருகனே

தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே

பழநிக்கு வந்தவன்

பழஞானப் பசியாலே

பழநிக்கு வந்தவன்

பழமுதிர்ச்சோலையிலே

பசியாறி நின்றவன்

பழமுதிர்ச்சோலையிலே

பசியாறி நின்றவன்

பசியாறி நின்றவன்

அழகெல்லாம் முருகனே

அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே

தெய்வமும் முருகனே

தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன்

குகனாக வாழ்பவன்

குன்றெல்லாம் ஆள்பவன்

குகனாக வாழ்பவன்

குறவள்ளிக் காந்தனவன்

குறிஞ்சிக்கு வேந்தனவன்

குறவள்ளிக் காந்தனவன்

குறிஞ்சிக்கு வேந்தனவன்

பூவாறு முகங்களிலே

பேரருள் ஒளிவீசும்

பூவாறு முகங்களிலே

பேரருள் ஒளிவீசும்

நாவாறப் பாடுகையில்

நலம்பாடும் வேலனவன்

நாவாறப் பாடுகையில்

நலம்பாடும் வேலனவன்

அழகெல்லாம் முருகனே

அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே

தெய்வமும் முருகனே

தெய்வமும் முருகனே