அழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள்

“`

அழகென்ற சொல்லுக்கு முருகா – பாடல் தகவல்

🎬 திரைப்படம்: பக்த விநாயகம் (1959)

🎼 பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

இந்த பாடல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசன் எழுதியது.

🎵 இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

இந்த பாடலுக்கு கே.வி. மகாதேவன் இசையமைத்துள்ளார். பாரம்பரிய தமிழ் இசையுடன் ஆன்மீக உணர்வை வழங்கும் தனித்தன்மை கொண்டவர்.

🎤 பாடகர்: டி.எம். சௌந்தரராஜன்

🛕 பாடலின் நோக்கம்

முருகப் பெருமானின் அழகு, கருணை, மேன்மை ஆகியவற்றைப் போற்றும் பக்திப் பாடல் இது. பக்தர்கள் இதைப் பாடுவதன் மூலம் மனச்சாந்தியையும் இறைநம்பிக்கையையும் பெறுகிறார்கள்.

🎙 பாடலின் தாக்கம்

தமிழ்நாட்டின் பல முருகன் கோவில்களில் பக்தர்கள் இந்தப் பாடலை பக்தியுடன் பாடி வருகின்றனர்.

“`

முருகா முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி

உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி

உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா

கொடும் சூரரை போரிலே

வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா

கொடும் சூரரை போரிலே

வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா

முக்கனியான தமிழ் தந்த

செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா

உன்னை அண்டினோர் வாழ்விலே

இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா

உன்னை அண்டினோர் வாழ்விலே

இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா

பழம் நீ அப்பனே முருகா

ஞானப்பழம் நீ அல்லாது

பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி

உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா

பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ

அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா

பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ

அல்லவோ முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா

உன்னை அண்டினோர் வாழ்விலே

இன்பமே முருகா

சக்தி உமை பாலனே முருகா

சக்தி உமை பாலனே முருகா

மனித சக்திக்கு எட்டாத

தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள்

கண்ட திரு முருகா

பரம்பொருளுக்கு

குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள்

கண்ட திரு முருகா

பரம்பொருளுக்கு

குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா

அரகரா சண்முகா முருகா

என்று பாடுவோர் என்னத்தில்

ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா

உந்தன் அருளுக்கு

எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா

உந்தன் அருளுக்கு

எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா

எந்தன் கலியுக வரதனே

அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

உந்தன் அருளன்றி

உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகா